நாட்டின் 10மாநிலங்களில் 5.69லட்சம் ஹெக்டர் பரப்பளவில் வெட்டுக்கிளிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்து அதன் மூலம் பல விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்தது. அதனை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் மத்திய வேளாண் அமைச்சகம் நாட்டிலுள்ள 10 மாநிலங்களில் 5லட்சத்து 66 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் உள்ள வெட்டுகிளிகள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
அதிலும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வந்த வெட்டுகிளிகளை தடுப்பதற்காக பல தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனால் தான் தற்போது வெட்டுகிளிகளை கட்டுப்படுத்துவது சாத்தியமானது என்றும், சில பகுதிகளில் வெட்டுக்கிளிகளை ஒழிப்பதற்காக பூச்சிக்கொல்லி தெளிப்பு வாகனங்களும், அதனுடன் மனிதவள மற்றும் கட்டுபாட்டு குழுக்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் ராஜஸ்தானில் உள்ள சில மாவட்டங்களில் மட்டுமே வெட்டுக்கிளிகள் அதிக பயிர்களை சேதப்படுத்தி இழப்பு ஏற்பட்டதாகவும், மற்ற பகுதிகளில் பெரிய பயிர் இழப்பு ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…