தொடர் அதிகரிப்பு: மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 1297 ஆக உயர்வு.!
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்பு, உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே இருக்கிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் மத்திய , மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனாவால் 5734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பின் எண்ணிக்கை 166ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 473 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மகாராஷ்டிராவில் 1135 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 72 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 117 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 1297 ஆக உயர்ந்துள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், புதிதாக, மும்பை 143, புனே 3, பிசிஎம்சி 2, யவத்மால் 1, அவுரங்காபாத் 3, தானே 1, நவி மும்பை 2, கல்யாண் டோம்பிவலி 4, மீரா பயந்தர் 1, வசரி விரார் 1, சிந்துதுர்க் 1, இதுபோன்ற 162 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 1297 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
The current count of COVID19 patients in the state of Maharashtra is 1297.
Newly,Mumbai 143,Pune 3,PCMC 2,Yawatmal 1,Aurangabad 3,Thane 1,Navi Mumbai 2, Kalyan Dombivali 4,Meera Bhayandar 1,Vasari Virar 1, Sindhudurg 1,Such 162 patients have been identified positive for Covid19.— Rajesh Tope (@rajeshtope11) April 9, 2020