தொடரும் இயற்கை பேரிடர்கள்! நேபாளத்தில் நிலநடுக்கம்
இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளது. நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, நேபாளத்திலும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளம் காத்மாண்டுவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு, நில அதிர்வினால், குடியிருப்புகள் லேசாக அசைந்துள்ளது. இதனையடுத்து குடியிருப்பு வாசிகள் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.8 ஆக பதிவாகி உள்ளது. மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.