பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங், ஃபேஸ்புக்கில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக கூறி, அவரது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கியது ஃபேஸ்புக் நிறுவனம்.
தெலுங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங் தனது ஃபேஸ்புக் கணக்கில் மதவிரோதத்தைத் தூண்டும் வகையிலும், வெறுப்புணர்வை பரப்பும் கருத்துக்களைத் தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. முஸ்லிம்கள் குறித்தும், ரோஹிங்கியா அகதிகளை சுட்டுத் தள்ளவேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார். இதன் காரணமாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எங்கள் தளத்தில் வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் ஈடுபட்டதாலும், எங்கள் கொள்கையை மீறியதற்காகவும் நாங்கள் ராஜா சிங்கின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கை தடை செய்துள்ளோம்.
மேலும், பேஸ்புக்கில் விதிமுறைகளை மீறுபவர்களை ஆய்வு செய்யும் பணி விரிவானது. அந்த முடிவுக்கு தற்போது இது சென்றுள்ளது. 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்ட இந்தியாவை மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக பேஸ்புக் கருதுகிறது. பேஸ்புக்கின் கொள்கைகள் இந்தியாவில் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருப்பதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறியதையடுத்து, தற்போது புலன் விசாணையில் உள்ளது. ஃபேஸ்புக்கில் மட்டும் ராஜா சிங்கிற்கு 30 லட்சம் பின்தொடர்பவர்கள் இருந்தனர்.
இப்போது ராஜா சிங் கணக்கு முற்றிலும் நீக்கப்பட்டதால் அவரின் எந்த பதிவையும் இனிமேல் காண முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், சமூக ஊடக தளத்தின் ஊழியர்கள் தொடர்ச்சியான தேர்தல்களில் தோல்வியடைந்த ஒரு அரசியல் முன்னோக்கிலிருந்து மக்களை ஆதரிப்பதாகவும், பிரதமர் மற்றும் மூத்த அமைச்சரவை அமைச்சர்களை துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து, பேஸ்புக் அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுமப்பட்டதை அடுத்து நேற்று ஆஜராகி சுமார் 5மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…