நாளை முதல்.. கேஸ் சிலிண்டர் – வெளியான குட் நியூஸ்…!

Default Image

கேஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் தொடரும் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்து நாளை முதல் சேவை தொடரும் என அறிவிப்பு.

கேஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் தொடரும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வீட்டு உபயோகதிற்கு பயன்படும் இண்டேன் கேஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் சிக்கல் இருப்பதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடந்து புகார் எழுந்து வந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 2 நாட்களாக சிலிண்டர் பதிவு செய்ய முடியாத சூழல் நீடித்து வந்தாக குற்றசாட்டு வைக்கப்பட்டது.

இந்த சூழலில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்த கூடிய இந்தியன் கேஸ் சிலிண்டர் பதவி மற்றும் விநியோகம் செய்வதில் கடந்த 2 தினங்களாக பிரச்சனை இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து தங்கு தடையின்றி கேஸ் விநியோகத்தை மேற்கொள்ளவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

எனவே, தொல்நூட்ப கோளாறு சரி செய்து, நாளை முதல் வழக்கம்போல் சேவைகள் தொடரும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சந்தை பிரிவு தலைமை பொது மேலாளர் சந்தீப் சர்மா அறிவித்துள்ளார். பயனாளர்கள் வழக்கம்போல் தங்களது கேஸ் சிலிண்டர் பதிவை எஸ்எம்எஸ் அல்லது ஐவிஆர்எஸ் எண் 77189 55555 மூலம் விநியோகஸ்தர்களை தொடர்புகொள்ளலாம்.

அதாவது ஏற்கனவே பதிவு செய்தியிருக்கக்கூடிய எண் வாயிலாக மிஸ்டு கால் – 84549 55555, வாட்ஸ் அப் – 75888 88824 என்ற எண்கள் மூலம் விநியோகஸ்தர்களை தொடர்புகொள்ளலாம். கேஸ் பில்லில் உள்ள தொலைபேசி என் வாயிலாக நுகர்வோர்கள் தொடர்த்வபுக்கொண்டு பேசலாம். வாடிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பரு கூடிய விரைவில் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும். குறிப்பாக இன்று மாலைக்குள் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு நாளை முதல் வழக்கம் போல் சேவைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்