அக்.,17 தொடங்குகிறது ராமர் கோவில் கட்டுமானம்!! புதிய தலைவர் தேர்ந்தேடுப்பு

Default Image

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் வரும் நவராத்திரி பண்டிகை முதல் தொடங்கும் என்று ராமஜன்ம பூமி அறக்க்கட்டளையின் புதிய தலைவராகப் பொறுப்பேற்க உள்ள மஹந்த் கமல் நாயஸ் தாஸ் அறிவித்துள்ளார்.

தூண்களின் பலத்தை பரிசோதிக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளதாக தெரிவித்த அவர் கோயிலின் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வகையில் சுமார் 1200 தூண்கள் பூமிக்கு அடியில்
அழமாகப் பதிக்கப்பட உள்ளன.

அக்17 ந்தேதி உத்தரபிரதேசத்தில் நவராத்திரி தொடங்குகிறது.இந்த விஷேச தருணத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நவராத்திரி தொடக்கத்துடன் ராமர் கோவிலுக்கான அடித்தளமாக
தூண்களை பதிக்கும் பணி தொடங்க உள்ளது என்று அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்