உத்தர பிரதேச அயோத்தியில் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம்அனுமதி கொடுத்தது. அதைத் தொடர்ந்து ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அறக்கட்டளை அமைக்க உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
இதற்கு தலைவராக மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கடந்த மாதம் 11-ம் தேதியிலிருந்து நிலத்தைச் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, இன்று ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. கட்டுமான பணிக்கு முன் சிவபெருமானுக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெறவுள்ளது.
இலங்கை மீது படையெடுப்பதற்கு முன்பு, சிவனை ராமர் வழிபட்டார். அதை நினைவுகூரும் வகையில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது. இந்த வழிபாடு 2 மணி நேரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் கடந்த சில மாதங்களுக்கு…
சென்னை : சென்னையில் பிராமணர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட போது, தெலுங்கு மக்கள் பற்றி அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
தூத்துக்குடி : தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில், அக்கட்சி தலைவர் விஜய் பேசுகையில், திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த…
சென்னை : நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (11-11-2024) காலை 0830…
ஆக்ரா : உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் செயல்பட்டு வரும் ஒரு பழைய பைக் ஷோ ரூமில் டீ கடைக்காரரை…