அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி இன்று துவக்கம்
உத்தர பிரதேச அயோத்தியில் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம்அனுமதி கொடுத்தது. அதைத் தொடர்ந்து ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அறக்கட்டளை அமைக்க உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
இதற்கு தலைவராக மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கடந்த மாதம் 11-ம் தேதியிலிருந்து நிலத்தைச் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, இன்று ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. கட்டுமான பணிக்கு முன் சிவபெருமானுக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெறவுள்ளது.
இலங்கை மீது படையெடுப்பதற்கு முன்பு, சிவனை ராமர் வழிபட்டார். அதை நினைவுகூரும் வகையில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது. இந்த வழிபாடு 2 மணி நேரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.