ராமர் கோயில் கட்டுமானம் அடுத்த மாதம் தொடங்க வாய்ப்புள்ளது.! மகந்த் நிர்த்ய கோபால்.!
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்க வாய்ப்புள்ளது என மகந்த் நிர்த்ய கோபால் தெரிவித்தார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், கோயில் அமைப்பதற்கு மத்திய அரசு 3 மாதத்திற்குள் அறக்கட்டளையை அமைக்க வேண்டும் எனவும், அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்ட ஒதுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை அமைத்தது. கொரோனா வைரஸ் காரணமாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கின.
இந்நிலையில், மத்திய அரசு அமைத்த ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிர்த்ய கோபால் கூறுகையில், ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை அடுத்த மாதம் தொடங்கப்படலாம். பூமி பூஜைக்கான பணி தொடங்கும் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடியை அழைக்க திட்டமிட்டுள்ளது.
ஆனால், பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாரா..? என்பது குறித்து இப்போது கூறமுடியாது. நாளை நடக்கும் கூட்டத்துக்குப்பின் பிரதமர் மோடி உறுதியாகும் என கூறினார்.