தொகுதி மறுசீரமப்பு வடக்கு – தெற்கு இடையேயான போர் அல்ல! டி.கே.சிவகுமார் பேச்சு

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது மற்ற மாநிலங்கள் மீது நடத்தப்படும் அரசியல் தாக்குதல் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

dk shivakumar

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு  விவகாரம் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிகாக மாறியிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடை பெறுகிறது. இந்த கூட்டத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மேற்குவங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் பங்கேற்று இந்த விவகாரம் குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் “மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது மற்ற மாநிலங்கள் மீது நடத்தப்படும் அரசியல் தாக்குதல்” என தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” இப்போது இந்த விவகாரத்தில் நாம் ‘மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா’ என்ற தத்துவத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தை நாம் முன்னெடுத்துள்ளோம். இது வெறும் வடக்கு – தெற்கிற்கு இடையேயான போர் கிடையாது. தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை என்பது எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல, கூட்டாட்சியின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது.

என்னை பொறுத்தவரை மக்கள்தொகை அடிப்படையிலான இந்த தொகுதி மறுசீரமைப்பு என்பது தென்மாநிலங்கள் மீதான அரசியல் ரீதியிலான தாக்குதல் என்று தான் சொல்வேன். இந்த நேரத்தில்நான் இங்கு கர்நாடக துணை முதலமைச்சராக மட்டும் நிற்கவில்லைஇந்தியாவின் முன்னேற்றத்தில் எப்போதும் முன்னணியில் நிற்கும் ஒரு மாநிலத்தின் பெருமைமிகு பிரதிநிதியாக நிற்கிறேன். நான் மட்டுமில்லை  இந்த நேரத்தில் நாம் ஒன்றாக இணைவது தொடக்கம், ஒரே மாதிரி சிந்திப்பது முன்னேற்றம், ஒன்றாக சேர்ந்து உழைப்பது வெற்றி எனவே ஒன்றாக போராடுவோம், ஒன்றாக உழைப்போம்” எனவும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்