INDIA Alliance : பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளிடைய தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது இறுதியானது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டது. 40 மக்களவை தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
பீகார் மாநிலத்தில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் மகாகத்பந்தன் கூட்டணியும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை எதிர்கொள்கின்றனர். இதனிடையே, இந்தியா கூட்டணியில் இருந்த பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் சமீபத்தில் அந்த கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்து முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இது இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர் குழப்பம் நீடித்து வந்த நிலையில், தற்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சமீபத்தில், பீகாரில் NDA கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது.
அதன்படி, வரும் மக்களவை தேர்தலில் பீகார் மாநிலத்தில் ராஸ்ட்ரிய ஜனதாதளம் 26 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினீஸ்ட் கட்சி 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 1 இடத்திலும் போட்டியிடுகிறது. இதில், முதல் கட்ட தேர்தல் நடைபெறும் கயா உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு ஏற்கனவே ராஷ்டிரிய ஜனதாதளம் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், அவர்கள் வேட்புமனுவும் தாக்கல் செய்தனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…