பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி.. எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?

india alliance

INDIA Alliance : பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளிடைய தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது இறுதியானது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டது. 40 மக்களவை தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

பீகார் மாநிலத்தில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் மகாகத்பந்தன் கூட்டணியும்  நாடாளுமன்ற மக்களவை தேர்தலை எதிர்கொள்கின்றனர். இதனிடையே, இந்தியா கூட்டணியில் இருந்த பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் சமீபத்தில் அந்த கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்து முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

இது இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர் குழப்பம் நீடித்து வந்த நிலையில், தற்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சமீபத்தில், பீகாரில் NDA கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது.

அதன்படி, வரும் மக்களவை தேர்தலில் பீகார் மாநிலத்தில் ராஸ்ட்ரிய ஜனதாதளம் 26 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினீஸ்ட் கட்சி 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 1 இடத்திலும் போட்டியிடுகிறது. இதில், முதல் கட்ட தேர்தல் நடைபெறும் கயா உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு ஏற்கனவே ராஷ்டிரிய ஜனதாதளம் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், அவர்கள் வேட்புமனுவும் தாக்கல் செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்