கூட்டுச்சதி செய்யும் சீனா ,பாக்கிஸ்தான்; எதையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது – இந்திய ராணுவம்
இந்தியா மாற்று சீனாவுக்கு இடையே எல்லை பிரச்சனை ஒரு முடிவில்லாமல் நீண்டுக் கொண்டு தான் செல்கிறது.இதில் லடாக் பிரச்சனை இந்தியாவிற்கு பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.
இதற்கிடையில்,இந்திய ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே கூறுகையில் செவ்வாயன்று, “பாகிஸ்தானும் சீனாவும் ஒன்றாக சேர்ந்து கொண்டு ஒரு கூட்டு அச்சுறுத்தலை அளித்து வருகிறது.இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.
மேலும் எந்தவொரு நிகழ்வையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது என்று கூறிய ஜெனரல் நாரவனே, ” கிழக்கு லடாக்கில் உள்ள பகுதிகள் எங்களது முழு கட்டுப்பாட்டிலே உள்ளது , பரஸ்பர மற்றும் சமமான பாதுகாப்பின் அடிப்படையில் தீர்வு காண்போம் என்று நம்புகிறோம் என்றார்.”