ஒருமித்த உடலுறவு கற்பழிப்பு அல்ல – ஒடிசா உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Default Image

திருமண வாக்குறுதியின் பேரில் ஒருமித்த உடலுறவு, கற்பழிப்பு அல்ல என ஒடிசா உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளித்த பிறகு சம்மதத்துடன் உடலுறவு கொள்வது கற்பழிப்பு அல்ல என ஒடிசா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது, திருமணம் செய்வதாக உறுதியளித்து, வயது வந்த பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபடுவது பலாத்காரம் ஆகாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் ஒருமித்த அடிப்படையில் பாலியல் உறவு வைத்திருந்தால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக கற்பழிப்பு குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

பலாத்கார வழக்கின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க கீழமை நீதிமன்றத்துக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது. நிபந்தனையின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர், ஜாமீனில் உள்ளவர், விசாரணைக்கு ஒத்துழைப்பார் என்றும் பாதிக்கப்பட்டவரை அச்சுறுத்த மாட்டார் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தகவல்களின்படி, ஒரு இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதியில், ஒரு பெண்ணுடன் உடல் ரீதியில் உறவு கொண்டார் என கூறப்படுகிறது. ஆனால், சில நாட்களில் குற்றவாளி தப்பியோடிய நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரது ஜாமீன் மனு கீழ்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதால், குற்றம்சாட்டப்பட்டவர் உயர் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார்.

முன்னதாக உச்ச நீதிமன்றம் இதேபோன்ற ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், ஒரு பெண் ஒருமித்த அடிப்படையில் பாலியல் உறவு வைத்திருந்தால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக 376 ஐபிசி சட்டம் பயன்படுத்தப்படாது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக மற்ற குற்றவியல் சட்டங்கள் பயன்படுத்தப்படலாம் என உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஒடிசா உயர்நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்