இருவர் சம்மதத்துடன் உறவு கொண்டால் அது கற்பழிப்பு இல்லை.! உயர்நிதிமன்றம் அதிரடி

Default Image

இருவரின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டால், அது பாலியல் பலாத்காரமாக எடுத்துக்கொள்ள முடியாது என கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

கர்நாடகாவில் வசித்து வரும் ஒரு காதல் ஜோடிகள், ஆரம்ப காலகட்டத்தில் நண்பர்களாக இருந்துள்ளனர். பின்னர், அவர்களின் உறவு காதலாக வளர்ந்துள்ளது, மேலும் இருவரும் ஐந்து ஆண்டுகளாக உறவில் இருந்துள்ளனர்.

இறுதியில், இருவராலும் சாதி வேறுபாடு காரணமாக திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண், போலீசாரிடம் திருமணத்தை காரணம் காட்டி தன்னை கற்பழித்ததாக, தனது காதலன் மீது புகார் அளித்துள்ளார். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட காதலன் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட நபரின் வழக்கை விசாரிக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவரும், புகார்தாரரும் காதலித்து வருவதாக கூறி, ஐந்து ஆண்டுகளாக பலமுறை உடலுறவு கொண்டதாகவும், ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக, இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருக்க முடியாது.

அந்த பெண்ணின் சம்மதத்துடன் தான், இத்தனை முறை இத்தனை ஆண்டு உடலுறவு கொண்டிருக்க முடியும். இதனால், திருமணம் முடிவடையவில்லை என்பதற்காக ஐந்தாண்டுகள் இருவரின் சம்மதத்துடன் பாலியல் உறவில் ஈடுபடுவது பலாத்காரமாக கருத முடியாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இதனையடுத்து காதலனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்