2021-22 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் தோல்வியுற்றுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று மாநிலங்களவையில் பேசுகையில், நாட்டில் வளர்ச்சிக்கான தேவையைத் தூண்டுவதில் அரசாங்கம் தவறிவிட்டது.மொத்த உள்நாட்டு உற்பத்தியானது “திறமையற்ற பொருளாதார முறைகேடு” காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளிவிவரங்களுக்குச் சென்றுவிடும்.2021-22 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் தோல்வியுற்றது.ஏழைகளுக்கு ஒரு சிறிய அளவு பணம் கூட வழங்கப்படவில்லை.
தேவையைத் தூண்ட வேண்டும். தேவையைத் தூண்டுவதற்கான சிறந்த வழி மக்களின் கைகளில் பணத்தை கொடுப்பது ஆகும்.ஆனால் இதில் இந்த அரசாங்கம் தோல்வியுற்றுள்ளது.நான் குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் சொல்கிறேன். ஆனால் அரசு இன்னும் பாடங்களைக் கற்கவில்லை. நீங்கள் பாடங்களைக் கற்காததன் விளைவாக, இன்னும் 12 மாதங்கள் ஏழைகள் கஷ்டப்பட்டு, பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று நான் பயப்படுகிறேன். நாடு மூன்று ஆண்டுகளாக “திறமையற்ற பொருளாதார நிர்வாகத்தை” கண்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…