காய்கறி விற்பனையாளரிடம் ரூ.2000 நன்கொடை கேட்டு மிரட்டிய காங்கிரஸ் தொண்டர்கள் சஸ்பெண்ட்

Default Image

கேரளாவின் கொல்லம் பகுதியில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸின் ‘பாரத் ஜோடோ’ யாத்திரையின் போது காங்கிரஸ் தொண்டர்கள் காய்கறி விற்பனையாளரிடம் ரூ.2000 கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல்துறையின் கூற்றுப்படி, நன்கொடைத் தொகை தொடர்பாக காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் காய்கறி விற்பனையாளருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது.

காங்கிரஸார், ஒரு காய்கறி வியாபாரியிடம் யாத்திரைக்கு நன்கொடையாக ரூ 2,000 கொடுக்குமாறு சொன்னார். அதற்குப் பதிலாக அவர் ரூ 500 மட்டுமே தர முடியும் என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் கடையின் காய்கறி எடை இயந்திரம் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

வீடியோவில், காங்கிரஸ் தொண்டர் காங்கிரஸ் யாத்திரைக்கு காய்கறி விற்பனையாளரிடம் ரூ.2000 கேட்டுள்ளார். அப்போது கடை உரிமையாளர், காங்கிரஸ் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், “நாங்களே வாழ்க்கை நடத்த போராடுகிறோம், எங்களிடம் பணம் கேட்பதற்கு பதிலாக நீங்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்” என்று கூறுகிறார். இதையடுத்து காங்கிரஸ் தொண்டரும் கடைக்காரரும் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொண்டனர்.

இந்த சம்பவத்தையடுத்து கேரள போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். கிரிமினல் அத்துமீறல், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் கிரிமினல் மிரட்டல் ஆகியவற்றிற்காக காங்கிரஸ் தொண்டர்கள் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பொது இடங்களில் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காகவும், குற்றமிழைத்ததற்காகவும் கடை உரிமையாளர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரளா காங்கிரஸ் தலைவர் வருத்தம் தெரிவித்ததோடு கே சுதாகரன் மூன்று காங்கிரஸ் பிரமுகர்களைக் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்