கேரளா வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் தலைவரின் வேட்பாளரின் போஸ்டர்கள்.!

Default Image

கேரளாவில் நேற்று துவங்கப்பட்ட வந்தே பரத் ரயிலில் காங்கிரஸ் தொண்டர்கள் பலாக்காடு காங்கிரஸ் எம்பி போஸ்டர்கள் ஒட்டியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. 

பிரதமர் மோடி கேரளா பயணம் மேற்கொண்டு வந்தே பாரத் ரயில் , இந்தியாவில் முதன் முதலாக தண்ணீர் மெட்ரோ கப்பல் என பல்வேறு திட்டங்களை துவங்கி.வைத்தார். இதில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை செல்லும்.இந்த ரயிலானது கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர், ஷோரனூர் சந்திப்பு, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.

நேற்று துவங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவையில், ரயிலானது ஷோரனூர் சந்திப்பு வந்த போது அப்பகுதி பாலக்காடு காங்கிரஸ் எம்.பி ஸ்ரீகண்டனுக்கு ஆதரவாக காங்கிரஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஓட்டினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. முதலில் ஷோரனூர் பகுதியில் வந்தே பாரத் ரயில் நிற்காமல் செல்லும்படி அட்டவணை அமைக்கப்பட்டதாகவும், பின்னர் அப்பகுதி எம்பி ஸ்ரீகண்டன் வந்தே பாரத் ரயில் ஷோரனூர் சந்திப்பில் நிற்காமல் சென்றால் ரயிலை நிறுத்துவோம் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக தான் ஷோரனூர் ரயில் சந்திப்பிற்கு வந்த வந்தே பாரத் ரயில் மீது காங்கிரஸ் தொண்டர்கள் காங்கிரஸ் எம்பி ஸ்ரீகண்டன் புகைப்படத்தை ஓட்டியுள்ளனர் என கூறப்படுகிறது. உடனடியாக அந்த போஸ்டர்கள் வந்தே பாரத் ரயிலில் இருந்து நீக்கப்பட்டது. இது குறித்து ஸ்ரீகண்டன் கூருகையில், கட்சியின் உத்தரவின் பெயரில் இந்த செயல் நடக்கவில்லை. இது குறிப்பிட்ட காங்கிரஸ் தொடர்கள் தன்னிச்சையாக இவ்வாறு செய்துவிட்டனர். அதிலும் இது பசை கொண்டு ஒட்டப்படவில்லை. என விளக்கம் அளித்து இருந்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்