காங்கிரஸ் வெற்றி..! கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்த சோனியா காந்தி..!

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு காரணமாக இருந்த கர்நாடக மக்களுக்கு சோனியா காந்தி நன்றி கூறியுள்ளார்.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதன்பின், கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமார் இன்று பதவியேற்றுக்கொண்டனர். இந்த பதவியேற்பு விழா பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் ராகுல்காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு காரணமாக இருந்த கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நன்றி கூறியுள்ளார்.
மேலும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு மாநிலத்தின் வளர்ச்சிப் பாதையில் செயல்படும் என்று உறுதியளித்ததோடு, முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒப்புதல் அளித்தது பெருமைக்குரியது என்று கூறியுள்ளார்.
#WATCH | Former Congress president Sonia Gandhi thanked the people of Karnataka for electing Congress in the recently concluded assembly elections and assured them that the newly-formed govt will work on the path of development of the state. pic.twitter.com/cvqr76fyFz
— ANI (@ANI) May 20, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025