பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 8 மாநகராட்சியில் 7-ஐ கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றாமல் படுதோல்வி அடைந்துள்ளது. அதாவது, சென்ற பிப்.14ம் தேதி, 109 முனிசிபல் கவுன்சில்கள் மற்றும் 8 முனிசிப்பாலிட்டி கார்ப்பரேஷன்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேத்தலில் 71.39 சதவீத வாக்குப் பதிவானது என கூறப்பட்டது.
இதில் மொத்தம் 9,222 பேர் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் 2,037 பேரும், பாஜக சார்பில் 1,003 பேரை தேர்தலில் போட்டியிட்டனர். இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் 7 முனிசிப்பாலிட்டிகள் அனைத்தையும் காங்கிரஸ் கைப்பற்றி, பெரும்பான்மையான இடங்களில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடந்த இந்த தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் அரியானா போன்ற மாநில விவசாயிகள் தான் அதிகளவில் வேளாண் சட்டத்துக்கு எதிராக பங்கெடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி, அபோஹர், பதிந்தா, கபுர்தலா, ஹோஷியார்பூர், பதான்கோட், மோகா மற்றும் பட்லாவை ஆகிய 7 மாநகராட்சிகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…