நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மறுநாள் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவையில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் உரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து, இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி மாநிலங்களவையில் பதில் அளித்து வருகிறார். அதில் “ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது உரையில் இந்தியாவின் ஆற்றல், வலிமை மற்றும் பிரகாசமான எதிர்காலம் பற்றி பேசினார். ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாட்டின் 75 ஆவது குடியரசு தினம் கொண்டாட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. பாஜக 400 இடங்களில் ஜெயிக்க மல்லிகார்ஜுன கார்கே ஆசிர்வாதம் வழங்கியுள்ளார் என தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் போராட்டம்.!
வரும் தேர்தலில் 40 முதல் 50 இடங்களாவது காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன். நக்சல் பயங்கரவாதத்தை வளர விட்டு மிகப்பெரிய பிரச்சினையாகியது காங்கிரஸ் கட்சி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது எமர்ஜென்சி உட்பட எண்ணற்ற ஒடுக்கு முறைகள் நடந்தன. நக்சலைட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு காங்கிரஸ் ஆட்சியாளர்களே காரணம்.
காங்கிரஸ் கட்சி தலைவர்கள் எண்ணங்கள் காலாவதியாகி விட்டன. ஒரு காலத்தில் எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது என நானே கவலைப்படுகிறேன். காங்கிரஸ் நாட்டை வடக்கு- தெற்கு என பிரித்தாள நினைக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 12-வது இடத்திற்கு பின்னடைந்தது. பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 5-வது இடத்திற்கு வந்துள்ளது.
எனது குரலை மக்கள் கேட்க தொடங்கி விட்டனர். யாராலும் என் குரலை ஒடுக்க முடியாது. காங்கிரஸ் கட்சி தங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு பாரத ரத்னா விருதை அளித்தது. அம்பேத்காருக்கு காங்கிரஸ் கட்சி பாரத ரத்னா விருதை தரவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களால் மக்கள் சாலைகளில் இறங்கி போராடினார்.
ஆங்கிலேயர்கள் கால சட்டங்களை நீங்கள் ஏன் நீக்கவில்லை என காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தை கூட ஆங்கிலேயர் பாணியிலேயே காங்கிரஸ் பின்பற்றியது. பாஜக ஆட்சியில் ஆங்கிலேயர் கால சட்டங்களை நீக்குகிறோம் அல்லது மாற்றுகிறோம். ஆங்கிலேயர் காலத்து மரபுகளை ஏன் நீங்கள் பின்பற்றினீர்கள் எனவும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் கட்சி கொள்கைகளுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை, தனது கொள்கைக்கு உத்தரவாதம் இல்லாத காங்கிரஸ் எனது உத்தரவாதம் பற்றி கேள்வி எழுப்புகிறது” என கூறினார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…