அமலாக்கத்துறை மிரட்டலுக்கு காங்கிரஸ் அடிபணியாது.! பா.சிதம்பரம் அதிரடி கருத்து.!
அமலாக்கத்துறையின் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் காங்கிரஸ் என்றும் அடிபணியாது. – சோனியா காந்தியை அமலாக்க துறை விசாரணை செய்வதை எதிர்த்து பா.சிதம்பரம் கருத்து.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் பணமோசடி இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், இன்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை முன்பு விசாரணையில் இருக்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான பா.சிதம்பரமும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அவர் கூறுகையில், ‘நேஷனல் ஹெரால்ட் பற்றிய கணக்கு விவரங்கள் முறையாக வருமான வரித்துறை முன்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறைக்கு தேவையான அனைத்து விவரங்களும் வருமான வரித்துறையின் ஆவணங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அமலாக்கத்துறையின் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் காங்கிரஸ் என்றும் அடிபணியாது.’ என்று அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.