உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது – ஜெய்ராம் ரமேஷ்
EWS பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு பயணத்தில் காங்கிரசின் பங்கு உள்ளது என அக்கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்பளித்ததது. இதில், 10% இடஒதுக்கீடு செல்லும் என 3 நீதிபதிகள் ஆதரவாகவும், தலைமை நீதிபதி உள்ளிட்ட இருவர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும், பெரும்பாலான நீதிபதிகள் செல்லும் என்றதால் 10% இடஒதுக்கீடு உறுதியானது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்தும், எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை உறுதி செய்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது என அக்கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
EWS பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு பயணத்தில் காங்கிரசின் பங்கு குறிப்பிடத்தக்கது. 2005-06 ஆண்டில் மன்மோகன் சிங் அரசு தான் இதற்கான முன்னெடுப்பை எடுத்தது. சின்ஹோ ஆணையம் இது தொடர்பான அறிக்கை 2010ல் சமர்பித்தது, 2014ல் மசோதா தயாரானது என கூறியுள்ளார்.
மேலும், இந்த முடிவை நாம் பாராட்ட வேண்டும் அதே வேளையில், புதுப்பிக்கப்பட்ட ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பில் அது எந்த நிலையில் உள்ளது என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
The Congress party welcomes the Supreme Court’s verdict to uphold the 10% quota for EWS category. Congress played a significant role in this journey.
While we must applaud the decision, the govt must also make clear where it stands on an updated caste census.
:Shri @Jairam_Ramesh pic.twitter.com/PWrKboFcNP— Congress (@INCIndia) November 7, 2022