மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக, பழைய வாக்குச்சீட்டு முறையையே கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் மாநாட்டில், தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் 84-வது தேசிய அளவிலான 2-நாள் மாநாடு டெல்லியில் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள், கட்சியின் மாநிலத் தலைவர்கள் உட்பட 15000 மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
மாநாட்டில் பேசிய ராகுல்காந்தி, நாட்டை ஒருங்கிணைக்கும் முக்கிய காரணியாக விளங்குவது காங்கிரசின் கை சின்னமே என குறிப்பிட்டார். பாஜக வெறுப்பை வெளிப்படுத்தி வரும் அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சி அன்பை ஆயுதமாகக் கொண்டிருப்பதாகவும் ராகுல் கூறினார்.
மாநாட்டில் பேசிய சோனியாகாந்தி, கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரசை அழிக்க அனைத்து முயற்சிகளையும் பாஜக அரசு மேற்கொண்டதாகக் கூறினார். ஆனால் அந்த முயற்சிகளால் காங்கிரஸ் அடிபணிந்து வீழ்ந்துவிடவில்லை என்றும் சோனியா தெரிவித்தார்.
மோடி அரசு பலவீனப்பட்டுக்கொண்டிருப்பதாகக் கூறிய சோனியா, மத்திய அரசின் ஊழல்களை காங்கிரஸ் கட்சி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். மாநாட்டில், தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக, பழைய வாக்குச்சீட்டு முறையையே கொண்டுவர தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.
Congress wants Rahul Gandhi to get old ballot system
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…