மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும்: காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.!

Default Image

 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக, பழைய வாக்குச்சீட்டு முறையையே கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் மாநாட்டில், தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் 84-வது தேசிய அளவிலான 2-நாள் மாநாடு டெல்லியில் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள், கட்சியின் மாநிலத் தலைவர்கள் உட்பட 15000 மேற்பட்டோர்  இதில் கலந்து கொண்டுள்ளனர்.

மாநாட்டில் பேசிய ராகுல்காந்தி, நாட்டை ஒருங்கிணைக்கும் முக்கிய காரணியாக விளங்குவது காங்கிரசின் கை சின்னமே என குறிப்பிட்டார். பாஜக வெறுப்பை வெளிப்படுத்தி வரும் அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சி அன்பை ஆயுதமாகக் கொண்டிருப்பதாகவும் ராகுல் கூறினார்.

மாநாட்டில் பேசிய சோனியாகாந்தி, கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரசை அழிக்க அனைத்து முயற்சிகளையும் பாஜக அரசு மேற்கொண்டதாகக் கூறினார். ஆனால் அந்த முயற்சிகளால் காங்கிரஸ் அடிபணிந்து வீழ்ந்துவிடவில்லை என்றும் சோனியா தெரிவித்தார்.

மோடி அரசு பலவீனப்பட்டுக்கொண்டிருப்பதாகக் கூறிய சோனியா, மத்திய அரசின் ஊழல்களை காங்கிரஸ் கட்சி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். மாநாட்டில், தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக, பழைய வாக்குச்சீட்டு முறையையே கொண்டுவர  தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.
Congress wants Rahul Gandhi to get old ballot system

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்