தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகிய ஷிரோமணி அகாலிதளத்திற்கு காங்கிரஸ் ஆதரவு.!

Default Image

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகிய ஷிரோமணி அகாலிதளத்திற்கு ஆதரவை தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்வந்துள்ளது.

வேளாண் சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாகளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.

இதனிடையே, வேளாண் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக ஷிரோமணி அகாலிதளம் கடந்த சனிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவது இது மூன்றாவது முறை ஆகும். இது தொடர்பாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகிய ஷிரோமணி அகாலிதளத்திற்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேசிய செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான டெரெக் ஓ பிரையன் ஒரு ட்வீட்டில் கட்சியின் ஆதரவை தெரிவித்துள்ளார். அதில், “சுக்பீர் சிங் பாடல் மற்றும் விவசாயிகளுடன் அகாலி தளத்தின் நிலைப்பாட்டிற்கு நாங்கள் ஆதரிக்கிறோம். விவசாயிகளுக்காக போராடுவது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதியாகும்.

கடந்த 2006 ஆம் ஆண்டில், மம்தா பானர்ஜி விவசாயிகளின் உரிமைகளுக்காக வரலாற்று சிறப்புமிக்க 26 நாள் விரதத்தில் தனது உயிரைப் பணயம் வைத்தார். மாநிலங்களின் பங்கு, MSP, PDS மற்றும் கொள்முதல் ஆகியவற்றிற்கு ஆபத்தை விளைவிப்பதால் நாங்கள் இதை எதிர்க்கிறோம் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்