#BREAKING: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் “ராஜீவ் தியாகி” மாரடைப்பால் உயிரிழப்பு.!

Default Image

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் இன்று காலமானார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் இன்று காசியாபாத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். தேசிய கட்சி தனது தலைவரின் மறைவு குறித்து அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மூலம் தெரிவித்தது.

அந்த பதிவில், ‘ஸ்ரீ ராஜீவ் தியாகியின் திடீர் மறைவால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். ஒரு தீவிர காங்கிரஸ்காரர்  ஒரு உண்மையான தேசபக்தர். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இந்த வருத்தத்தில் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 கடந்த ஆண்டு அக்டோபரில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தியாகியை உத்தரப்பிரதேசத்தில் அதன் ஊடகப் பொறுப்பாளராக நியமித்தார். தியாகி காங்கிரசின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்தார். 2019 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மும்பையில் ஊடகங்களுக்கு தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்