இடைத்தேர்தல்: கேரளாவில் இரட்டை வெற்றியை காணும் காங்கிரஸ்!
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கர்ஜித்து வரும் நிலையில், அவருடன் தங்கையும் இணையவிருப்பதை காங்கிரஸ் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது.
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை முதல் 7 மணி முதல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பொது வெற்றி கணிப்பு ஓர் அளவுக்கு கணிக்கப்பட்டு வருகின்றனர்.
கேரளாவில் இரட்டை வெற்றியை பதிவு செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. ஆம், பாலக்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் மம்கூடதில் மற்றும் வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுள்ளது.
சொல்ல வேண்டும் என்றால், நேரு குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்கா காந்தி முதல் முறையாக எம்பியாக தேர்வாகி நாடாளுமன்றம் செல்லவிருக்கிறார். ஆம், கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் அவர் கிட்டத்தட்ட 4 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
ஏற்கெனவே, நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கர்ஜித்து வரும் நிலையில், அவருடன் தங்கையும் இணையவிருப்பதை காங்கிரஸ் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது. அது மட்டும் இல்லாமல், வயநாடு இடைத்தேர்தலில் ராகுலை விட பிரியங்கா அதிக வாக்குகளில் முன்னிலை பெற்றுள்ளார்.
முன்னதாக, ராகுல் 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், தற்போது இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையிலேயே 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தங்கை பிரியங்கா, அண்ணனை முந்தியுள்ளார்.
பாலக்காடு தொகுதி
பாலக்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் மம்கூடதில், 58,389 வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமாரை விட 18,840 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
செலக்கரா
கேரளா மாநிலம் செலக்கரா இடைத்தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளர் பிரதீப் 64,827 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் பாலகிருஷ்ணனை விட 12,201 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.