கொரோனா விவகாரத்தை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது – மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ்!
கொரோனா விவகாரத்தை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா குறித்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அவர்கள் தெரிவிக்கையில், கொரோனாவில் இருந்து நாட்டு மக்களை காக்க மத்திய அரசு தீவிரமாக போராடி வருவதாக கூறியுள்ளார்.
மேலும், அண்மைக்காலத்தில் இதுவரை சந்தித்திராத நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதால் இதனை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியினர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகவும் இதுபோன்ற போன்றவர்கள் தேசிய நலனில் அக்கறை உள்ளவர்களாக இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்நேரத்தில் கூட அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் தேவையற்ற கருத்துக்களை பரப்பி, மக்களை குழப்புவது வேதனையளிப்பதாகவும், பிரச்சினைக்கு தீர்வு காண உதவாவிட்டாலும், பிரச்சனையின் தீவிரத்தை அதிகரிக்காமல் இருந்தால் கூட போதும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி குறித்த வீண் வதந்திகளை பரப்பி மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்த கூடாது எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
In pandemic period, please be “Part of Solution”, not “Political Pollution”. Don’t just sit around raising questions and creating obstacles”. ????#Unite2FightCorona pic.twitter.com/7itpz87g4v
— Mukhtar Abbas Naqvi (@naqvimukhtar) May 20, 2021