அரசியல் சாசனத்தை மீறியுள்ளார் பிரதமர் மோடி… காங்கிரஸ் கடும் விமர்சனம்!

jairam ramesh

அரசியல் சாசனத்துக்கு விரோதமாக மாநிலங்களுக்கான நிதியை குறைக்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான ஆடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு, பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடியின் அரசியல் சாசன விரோத செயலை நிதி ஆயோக் தலைமை அதிகாரி வெளிப்படுத்தியுள்ளார்.

14வது நிதிக் குழுவை மிரட்டி, மாநில அரசுகளின் வரி வருவாயில் இருந்து திருட அனுமதிக்கும் வகையில், பிரதமர் மோடியே அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு கொடூரமான முயற்சியை மேற்கொண்டதாக அந்த அதிகாரி வெளிப்படுத்தியுள்ளார். மாநிலங்களுக்கான நிதியை பிரதமர் தடுக்க முயன்றது அரசியல் சாசனத்துக்கு முரணானது. மத்திய வரியில் 42% பங்கை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க 14-ஆவது நிதிக்குழு பரிந்துரை செய்தது.

தரையில் உறங்கி, தேங்காய் தண்ணீர் குடித்து கடும் விரதத்தில் பிரதமர் மோடி!

ஆனால், பிரதமர் மோடியே நிதிக்குழு பரிந்துரை செய்த பெருமளவு குறைக்க விரும்பியுள்ளார். நிதி குறைப்பு முயற்சியில் தோல்வியுற்ற பிரதமர் மோடி அரசு, 48 மணிநேரத்தில் முழு பட்ஜெட்டையும் மறுசீரமைத்துள்ளது. இதனால் தான் சமூக நலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஒவ்வொரு அடுக்குகளிலும் உண்மையை மறைக்க முயன்றது மோடி அரசின் பட்ஜெட்டில் வெளிப்பட்டுள்ளது. அரசியலமைப்பு அமைப்புக்கான இந்த அப்பட்டமான அலட்சியம், பிரதமரின் உண்மையான நிலை, கட்டுப்பாடு மற்றும் இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையை சிதைப்பது ஆகியவற்றை அம்பலப்படுத்துகிறது.

எனவே, அரசியல் நீதியை உறுதிப்படுத்தவும், கூட்டாட்சியை வலுப்படுத்தவும், அம்பேத்கரின் அரசியலமைப்பை நிலைநிறுத்தவும், இந்தியா, மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் என்று கூறி, பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல்காந்தி முன்னின்று நடத்துவதற்கு இதுவும் ஒரு காரணம் என்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்