ஜவர்ஹர்லால் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரல்ட்டு நிறுவனத்தை கடந்த 2008ஆம் ஆண்டு சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு சொந்தமான யங் இந்தியா நிறுவனம் வாங்கியது. அதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பெயரில் அமலாக்கத்துறை கடந்த வருடம் விசாரணையை தொடங்கியது.
இதன் பெயரில் நேற்று நேஷனல் ஹெரால்டு நிறுவனம் மற்றும் யங் நிறுவனத்திற்கு சொந்தமான 751.9 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சோனியா, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தின் ரூ.751 கோடி சொத்துக்கள் முடக்கம்! காரணம் என்ன?
இந்த முடக்கத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இது குறித்த கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அதில், அமலாக்க இயக்குனரகத்தால் ஏஜேஎல்-ன் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக வந்துள்ள செய்திகள், நடந்து வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவின் பயத்தை தெளிவாகக் காட்டுகின்றன.
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தோல்வியை காணப்போகும் பாஜக அரசு, தனது ஆதரவார்களான அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தி உள்ளது. இந்த முயற்சியும் தோல்வியடைந்து, தேர்தலிலும் பாஜக தோல்வியடையும்.
நேஷனல் ஹெரால்டு நிறுவனமானது சுதந்திர இயக்கத்தின் குரல். இந்திய தேசிய காங்கிரஸ் சுதந்திர இயக்கத்தில் பங்குபெற்றதற்கு பெருமை கொள்கிறது. நேஷனல் ஹெரால்டு நாளிதழின் தலைமை பகுதி குறிப்பில் பண்டித நேருவின் குறிப்பேடுகள் நமக்கு நினைவிற்கு வருகிறது. சுதந்திரம் தற்போது ஆபத்தில் உள்ளது. அதை உங்கள் முழு பலத்துடன் பாதுகாக்கவும் என குறிப்பிட்டு இருந்தார் ஜவஹர்லால் நேரு.
நமது ஜனநாயகக் குடியரசு நிறுவப்பட்ட இலட்சியங்களுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். என எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தனது கண்டனத்தை மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…