3 விமான நிலையங்களை குத்தகையாக பெற்ற அதானி ! சரியான காதலர் தின பரிசு கொடுத்த மோடி என விமர்சித்த காங்கிரஸ்.!

நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், பிரதமர் மோடியின் நண்பருமான கௌதம் அதானிக்கு, இந்தியாவிலுள்ள 3 விமான நிலையங்களை சுமார் 50 ஆண்டுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பா.ஜ.க ஆட்சி அமைத்ததிலிருந்து பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச் சலுகை, கார்ப்ரேட்க்கு ஆதரவான டெண்டர், பொதுத்துறையை கார்ப்ரேட் வசம் ஒப்படைப்பு என பல உதவிகளை செய்து வருகிறது.
PM Modi has the secret to giving the perfect gift – get the taxpayer to pay for it! pic.twitter.com/0CA1XgcW6C
— Congress (@INCIndia) February 15, 2020
இந்நிலையில், லக்னோ, அகமதாபாத், மங்களூரு விமான நிலையங்களை 50 ஆண்டுகால குத்தகைக்கு அதானி நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் அதானி நிறுவனம் இடையே கையெழுத்தாகியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, தொழிலதிபர் அதானிக்கு பிரதமர் மோடி சரியான பரிசை ரகசியமாக காதலர் தினத்தன்று அளித்துள்ளார் என தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025