புதிய சி.பி.ஐ இயக்குநருக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு…!!
சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷி குமார் சுக்லா நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அளித்ததை அடுத்து மீண்டும் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்ற அலோக் வர்மா CBI பொறுப்பில் இருந்து தீயணைப்புத்துறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா.இந்நிலையில் சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார் .
இந்நிலையில், சிபிஐ இயக்குநரை நியமிக்கும் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுனா கார்கே, ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் முன் அனுபவம் இல்லாத ரிஷி குமார் சுக்லா அந்த பதவியில் நியமிக்கப்பட்டதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மல்லிகார்ஜுனா கார்கே பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், எந்த பணி அனுபவம், ஒருங்கிணைப்பு மற்றும் லஞ்ச – ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் முன் அனுபவம் என எதுவும் இல்லாதவரை சி.பி.ஐ. இயக்குனர் பதவிக்கு தேர்வு செய்த மத்திய அரசு சி.பி.ஐ_க்கு இருக்கும் நிலைப்பாட்டை மத்திய அரசு பின்பற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.