இந்தியா குறித்து ஒபாமா பேசியதற்கு காங்கிரஸ் கட்சி தான் கரணம்.! நிர்மலா சீதாராமன் குற்றசாட்டு.!

Nirmala Sitharaman

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கருத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம் கண்டனம்.

கடந்து சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தபோது, தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, இந்தியப் பிரதமர் மோடியுடன் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சிறுபான்மையினவர்களின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால், ஒரு கட்டத்தில் இந்தியா பிரிந்து செல்வதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது என்று கூறியிருப்பேன் என தெரிவித்தார்.

மேலும், அப்படி பிரிந்து சென்றால் இந்தியாவின் நலன்களுக்கு முரணானது. இது பெரும்பான்மையாக இந்துக்கள் வாழும் இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி அளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராம், பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்கள் பாதுகாப்பு குறித்து பேசுகிறார். அது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஒபாமா ஆட்சியில் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள 6 நாடுகளை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார். அப்படி இருக்கும் சூழலில் அவர் வைக்கும் குற்றசாட்டை மக்கள் நம்புவார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், அடிப்படை ஆதாரமற்ற தரவுகளை காங்கிரஸ் வெளிநாடுகளில் பேசி வருவதே ஒபாமா போன்றவர்களின் கருத்துகளுக்குக் காரணம் என குற்றசாட்டினார். மேலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அனைவரும் முயற்சி செய்வோம் என்ற கொள்கையுடன் எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது. எந்த ஒரு சமுதாயத்துக்கு எதிராகவும் பாகுபாடு காட்டவில்லை என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்