மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!
நாடாளுமன்றத்திற்குள் நுழைய முற்பட்டபோது பாஜக எம்பிக்கள் மல்லிகார்ஜுன கார்கேவை உள்ளே விடாமல் தடுத்து தள்ளிவிட்டனர் என காங்கிரஸ் தரப்பு, சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம். மறுபுறம் அமித்ஷா பேசியதை காங்கிரஸ் திரித்து பேசுகிறது என பாஜக போராட்டம் என இருந்த சூழலில் பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கிழே விழுந்தார்.
கிழே விழுந்ததில் தலையில் அடிபட்ட பாஜக எம்.பி தற்போது டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கூறுகையில், ராகுல் காந்தி அருகே நாடாளுமன்ற வளாகத்தில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தேன். அப்போது, ராகுல் காந்தி ஒருவரை தள்ளினார். அவர் என்மீது விழுந்தார் அப்போது நான் கிழே விழுந்தேன் என கூறினார்.
இது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், நாங்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளே நுழைய முயன்றோம். அப்போது பாஜக எம்பிக்கள் எங்களை தடுத்து தள்ளினர். அப்போது எங்கள் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் தள்ளினர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தில் இச்சமபவம் நடைபெற்று இருக்கும் என கூறினார்.
இப்படியான பரபரப்பான சூழலில், மக்களவை சபாநாயர் ஓம்பிர்லாவிடம் காங்கிரஸ் தரப்பு புகார் அளித்துள்ளது. அதில், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் உள்ளே நுழைய முற்பட்ட போது பாஜக எம்பிக்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது எங்கள் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவர்கள் தள்ளினர். இதில், மல்லிகார்ஜுன கார்கே காலில் அடிபட்டது. ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த காலில் மீண்டும் அடிபட்டது. அதன் பிறகு அவர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு போராட்டத்தில் கலந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது என கூறி பாஜக எம்பிக்கள் மீது புகார் அளித்தனர்.
இச்சம்பவம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடுகையில், டாக்டர் அம்பேத்கர் அவர்களை அவமதித்த பிறகு, நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் அவமதிக்கிறார்.
அம்பேத்கரை அவமதித்த விவகாரத்தை மறைக்க, பாஜக தற்போது இந்தியா கூட்டணி எம்பிகளை நாடாளுமன்ற அவைகளுக்குள் உள்ளே செல்ல விடாமல் தடுக்கின்றனர். அவர்கள் பெரிய தடிகள் கொண்டு எங்களை தடுக்கின்றனர். ஆனால் நாங்கள் உறுதியாக நிற்போம். அம்பேத்கரை இழிவுபடுத்தும் கருத்துக்களை பொறுத்துக்கொள்ள மாட்டோம். நாட்டில் உள்ள அனைவரும் பாஜக,ஆர்எஸ்எஸ் இயக்கங்களை கடுமையாக எதிர்ப்பார்கள்.” என பதிவிட்டுள்ளார்.
बाबासाहेब डॉ आंबेडकर जी का घोर अपमान करने के बाद @narendramodi जी संसद की गरिमा का तिरस्कार भी करवाते है।
भाजपा सांसदों को मोटे डंडे वाले Placards से लैस कर INDIA गठबंधन के सांसदों के शांतिपूर्ण प्रदर्शन को रोकने के लिए धक्का-मुक्की करवाते हैं, ताकि बाबासाहेब, संसद, संविधान और… pic.twitter.com/9B7v36UT2W
— Mallikarjun Kharge (@kharge) December 19, 2024