மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் ஆனந்திபென் படேலிடம் உரிமை கோரியது காங்கிரஸ் கட்சி
நேற்று காலை முதல் 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்நிலையில் 22 மணி நேர வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்தது. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல்
பாஜக 109 இடங்களிலும்,பகுஜன் சமாஜ் கட்சி இரு தொகுதிகளை வென்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி ஒரு தொகுதியில் வென்றுள்ளது. 4 தொகுதிகளை சுயேச்சைகள் கைப்பற்றி உள்ளனர்.
அறுதிப் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு குறைந்தபட்சம் 116 எம்எல்ஏக்கள் பலம் தேவை. எனவே மத்திய பிரதேசத்தில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலை எழுந்தது.
ம.பி.யில் பேரவை தேர்தல் முடிவில் பின்னடைவை சந்தித்தாலும் வாக்குகளில் முன்னிலை பெற்றது பாஜக .ஒட்டு மொத்தமாக பாஜக 41% (1,56,42,980) வாக்கு, காங்கிரஸ் 40.9% (1,55,95,153) வாக்கு பெற்றது.ம.பி.யில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 47,827 ஆகும்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவிப்பு வெளியிட்டார் .அதில் பாஜக மீதான அதிருப்தியின் காரணமாகவே மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். பாஜக பட்டியல் இன மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் ஆதரவு அளிக்கும் என்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.மேலும் தேவைப்பட்டால் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் ஆனந்திபென் பட்டேல்.
மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் ஆனந்திபென் படேலிடம் உரிமை கோரியது காங்கிரஸ் கட்சி.கமல்நாத், திக்விஜய் சிங் உள்ளிட்டோர் ஆளுநரிடம் உரிமைகோரல் கடிதத்தை அளித்தனர்.
எனவே 15 ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜகவின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…
கேரளா : கேரளா, வயநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கிட்டத்தட்ட 4.13 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில்…