#டெல்லி டிபாசிட்#_64 வேட்பாளருக்கு ரூ.12.25 கோடி.,செலவு?அறிக்கை தாக்கல்

Default Image

தலைநகர் டெல்லியில்  போட்டியிட்டு தோல்வியை தழுவிய காங்கிரஸ் கட்சியின் 64 வேட்பாளர்களுக்கு செலவு தொகையாக ரூபாய் 12 கோடியே, 25 லட்சம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டில்லி சட்டசபை தேர்தல் ஆனது கடந்த பிப்8ந் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட  64 வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியை அடைந்தனர்; ஆனால் அதில் சிலருக்கு மட்டும், ‘டிபாசிட்’ தொகை திரும்ப கிடைத்தது.

இந்நிலையில்  தேர்தலில் போட்டியிட்டது தொடர்பாக  தன் கட்சி வேட்பாளர்களுக்கு செலவு செய்த தொகை குறித்து முதற்கட்ட தகவலை தேர்தல் கமிஷன் முன்பு காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்தது. தாக்கல் செய்யப்பட்டதில் அக்கட்சியின் பொது செயலர், மோதிலால் வோரா கையெழுத்துடன், கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆவணங்களில் உள்ள தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.அதன்படி, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட 64 வேட்பாளர்களுக்கு செலவு தொகையாக ரூபாய் 12 கோடியே, 25 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்