ஜமீன்தார் மனப்பாங்குடன் காங்கிரஸ் செயல்படுகிறது.! திரிணாமுல் காங்கிரஸ் கடும் விமர்சனம்.!
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தெலுங்கானாவில் 10 ஆண்டுகால சந்திரசேகர ராவ் ஆட்சியை அகற்றி காங்கிரஸ் முதன் முதலாக ஆட்சியை கைப்பற்றியது மட்டுமே அக்கட்சிக்கு ஒரு ஆறுதல் வெற்றியாக மாறியுளளது. மற்றபடி , ஏற்கனவே ஆட்சி செய்த சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாஜகவிடம் ஆட்சியை இழந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜகவிடம் தோல்வி கண்டுள்ளது. மிசோராமிலும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது.
இதன் மூலம் வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் சற்று சரிவை சந்தித்து வருகிறது. தென் மாநிலங்களில் பாஜகவால் பெரிய அளவிலான தாக்கத்தைமுடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோராம் மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வி குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
மிசோரம் தேர்தல் முடிவு: முதல்வர், துணை முதல்வர் அவுட்… ஆளும் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கிறது ஜோரம் மக்கள் இயக்கம்!
திரிணாமுல் காங்கிரஸ் செய்திக்குறிப்பில் வெளியான தகவலின்படி, காங்கிரஸ் ஜமீன்தார் மனப்பாங்குடன் செயல்பட்டு வருகிறது. அதனை அவர்கள் நிறுத்த வேண்டும். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சி தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதன் மூலம் காங்கிரஸ் தங்கள் குறைகளை சரி செய்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டிஎம்சி தலைவர் குணால் கோஷ் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளிக்க பேட்டியில், 4 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வி ஏற்றுக்கொள்ளமுடியாதது. இது காங்கிரஸின் தோல்வி தான் தவிர, பாஜகவின் வெற்றி அல்ல என்று குறிப்பிட்டார். காங்கிரஸ் தற்போதும் ஓர் ஜமீன்தார் கட்சி போலவே செயல்படுகிறது. அவர்கள் அதை நிறுத்த வேண்டும்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்திய கூட்டமைப்பை (I.N.D.I.A) முன்னோக்கி நகர்த்த சில நடவடிக்கைகளை பரிந்துரைத்தார். ஆனால் அவை காங்கிரஸால் செயல்படுத்தப்படவில்லை. இந்த நான்கு மாநில தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணியில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.