மத்திய அரசை கண்டித்து நாளை காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் .!
நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் அறிவிக்கப்பட்ட தேதியில் கண்டிப்பாக நடைபெறும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுநோய்களின் போது நீட், ஜே.இ.இ தேர்வுகளை நடத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து நாளை நாடு தழுவிய போராட்டங்களை நடத்தப்போவதாக காங்கிரஸ் நேற்று அறிவித்தது.
இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் , வெள்ளிக்கிழமை (அதாவது நாளை ) காலை 11 மணிக்கு மாநில மற்றும் மாவட்ட தலைமையகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன்னால் போராட்டங்களை நடத்தவுள்ளன.
செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஜேஇஇ-நீட் தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தி வருவதாகவும், கொரோனா நெருக்கடியின் போது இந்தத் தேர்வுகளை நடத்த அரசாங்கம் எடுத்த முடிவு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் கவலையை உருவாக்கியுள்ளது என வேணுகோபால் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.