தகுதி இல்லாத மத்திய அரசை எதிர்த்து காங்கிரஸ் ஒற்றுமையுடன் போராட வேண்டும் -கபில் சிபில் ..!

Published by
murugan

காங்கிரஸ் கட்சிக்கு உட்கட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தேவை. காங்கிரஸ் கட்சியை தற்போது இருக்கும் நிலையில் பார்க்க விரும்பவில்லை என கபில் சிபில் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக பஞ்சாப், கோவா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியும், பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். இதுகுறித்து தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில், காங்கிரஸில் யார் முடிவெடுக்கிறார் என்று தெரியவில்லை. ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் கட்சியை எப்படி வலுப்படுத்த முடியும் என்று சிந்திக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சிக்கு இன்றைய நிலையில் முழு நேர தலைவரே இல்லை. கட்சியில் இப்போது முடிவுகளை எடுப்பவர்கள் யாரென்பது தெரியவில்லை. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை  கூட்டினாலாவது கருத்துப் பரிமாற்றத்திற்கு வாய்ப்பு கிடைக்கும். பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து போராடக்கூடிய கட்சி காங்கிரஸ் கட்சி ஒன்று என்று கபில் சிபில் தெரிவித்தார். கொள்கைகளை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற கூடியவர்கள் அல்ல நாங்கள்.

இந்தியாவை காப்பாற்றக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா அரசு நாட்டின் அடித்தளத்தையே அழுத்திக்கொண்டிருக்கிறது. தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் வெளிப்படையான விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் நடக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் மத்திய தேர்தல் குழு இருக்கிறதா..? அடித்தளத்தில் இருந்து கட்சியை வலுப்படுத்த அமைப்பு உள்ளதா..?  காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியாளர்களின் கருத்துக்களுக்கு தலைமை செவிமடுக்க வேண்டும் என்று சிபில் வலியுறுத்தியுள்ளார்.

எந்த நாட்டின் ஆட்சியிலும் அல்லது எந்த கட்சியிலும் ஏகபோகமான அதிகார மையம் இருக்க முடியாது. மத்தியில் 20 பேர் அமர்ந்து கொண்டு ஜனநாயகத்தை செயல்படுத்த முடியாது என்றார் மகாத்மா காந்தி,  ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களால் அடித்தளத்திலிருந்து ஜனநாயகம் கட்டமைக்கப்பட வேண்டும். மகாத்மா காந்தி கூறியதை நினைவில் கொண்டு கட்சிக்கு எது நல்லதோ அதை செய்ய கபில்சிபில் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு உட்கட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தேவை. காங்கிரஸ் கட்சியை தற்போது இருக்கும் நிலையில் பார்க்க விரும்பவில்லை. கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டது. மக்களுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை மத்திய அரசு விற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டின் தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த நிலையில் இருப்பது தான் வருத்தம் தருகிறது.

ஒரு நாளைக்கு கூட பதவியில் தொடர தகுதி இல்லாத மத்திய அரசை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை ஒற்றுமையுடன் போராட வேண்டும் என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

15 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago