காந்தி சிலை முன்பு போராட்டத்தில் குதித்த காங்கிரஸ் எம்பிக்கள்.!
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராடிய காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. 2020-21-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இதன் பின் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராடிய காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்நிலையில்,அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, மத்தியஅரசு புதிதாககொண்டுவந்த 3 வேளாண்சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பட்ஜெட்கூட்டத்தொடர் நடந்த சமயத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Congress MPs lead by Shri @RahulGandhi protest at the Gandhi Statue, in front of the Parliament against the 3 black anti-farmer laws of the Modi govt.#IndiaVsPMModi pic.twitter.com/yuZXJJGBh4
— Congress (@INCIndia) January 29, 2021