பிற நாடுகளின் பெட்ரோல் விலையை பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!

Default Image

இந்தியா மற்றும் பிற நாடுகளின் பெட்ரோல் விலையை ட்விட்டரில் பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. சமீபத்தில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பலரும் கவலைகொள்கின்றனர்.

அதுவும், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தராகண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வரை, ரஷ்யா – உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தும், எரிபொருள் மீதான விலை மாற்றம் இல்லாமல் இருந்தது. ஆனால், 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு வல்லுநர்கள் கணித்தபடி, நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விவிறுவென உயர்ந்து வருகிறது.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.107.45-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.97.52-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் 9 வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.05 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.09 ஆகவும் அதிகரித்துள்ளது.

நாட்டில் எரிபொருள் மீதான விலை உயர்வுக்கு, மத்திய அரசை கண்டித்து அரசியல் கட்சிகள் போராட்டங்கள் மற்றும் விமர்சனங்கள் வைத்து வருகின்றனர். அந்தவகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், இந்தியா மற்றும் பிற நாடுகளின் பெட்ரோல் விலையை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், இந்திய ரூபாயில் பெட்ரோல் விலை – ஆப்கானிஸ்தான் – 66.99, பாகிஸ்தான் – 62.38, இலங்கை – 72.96, பங்களாதேஷ் – 78.53, பூடான் – 86.28, நேபாளத்தில் – 97.05க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.81க்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார். மேலும், ஃபகீரிடம் கேள்விகளை கேட்காதீர்கள். கேமராக்களின் மூலம் அறிவை பகிர்ந்துகொள்ளுங்கள். அவர் மூட்டை நிறைய ஜூம்லாக்களுடன் வந்து இந்தியாவை கொள்ளையடித்தார் எனக் கூறினார். ஜூம்லா என்றால் பொய் வாக்குறுதிகள் என்று அர்த்தம் என்பதாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்