3 நாள்கள் நாடு தழுவிய டிராக்டர் பேரணி…பஞ்சாப் TO அரியானா..டிராக்டர்களோடு களமிரங்கும் ராகுல்

Default Image

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுடன் இணைந்து நாடு தழுவிய டிராக்டர் பேரணியை 3 நாட்கள்  நடத்த உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா, உ.பி., மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காங் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து  நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட காங்  திட்டமிட்டுள்ளது.

அதன்படி வேளாண் சட்டத்தை கண்டித்து நாளை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு (அக்.,4,5,6,) தொடர் டிராக்டர் பேரணி  ராகுல் தொடங்க உள்ளார். இதற்கு முன்இன்று இப்பேரணியானது நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேதியானது மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்பேரணியானது கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி, காலை 11 மணிக்கு  துவங்குவதாகவும் பஞ்சாபில் இருந்து துவங்கும் பேரணி 6ம் தேதி அரியானாவில் சென்று முடிவடைவதாக காங்கிரஸ்  கட்சி தெரிவித்துள்ளது.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்