நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மற்றும் எதிர்க்கட்சியினர் ஆகியோர் சைக்கிளில் சென்றனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து பெகாசஸ், வேளாண் சட்டம், விலை உயர்வு மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி, அமளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து,நேற்றும் மாநிலங்களவையில் ஆவணங்களை கிழித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.மேலும்,பெகாசஸ் விவகாரத்தால் அவைத் தலைவர் இருக்கையையும் முற்றுகையிட்டனர்.
அந்த வகையில் இன்று,எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூசன் கிளப்பில் பெகாசஸ் உள்ளிட்ட சில விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இக்கூட்டத்தின் சிறப்பு என்னவென்றால்,14 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பதே.
இந்நிலையில்,எதிர்க்கட்சி எம்பிக்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் சென்றார்.அவருடன் பிற எதிர்க்கட்சித் தலைவர்களும் சைக்கிளில் பாராளுமன்றத்திற்கு சென்றனர்.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…