Breaking:விவசாயிகள் உயிரிழந்த லக்கிம்பூர் செல்ல ராகுல்,பிரியங்கா காந்திக்கு அனுமதி..!
லக்கிம்பூர் செல்ல காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு கருப்புக் கொடி காட்ட வந்த விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனின் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே விவசாயிகள் நான்கு பேரும், பொதுமக்கள் நான்கு பேரும் உயிரிழந்தனர்.மேலும் பலர் காயமடைந்தனர்.
இதனையடுத்து,லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற போது போலீசார், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே போலீசார் கைது செய்த நிலையில், அவர் மீது வழக்குப் பதிவும் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து,காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் இன்று லக்கிம்பூர் செல்ல இருந்த நிலையில்,உத்தரபிரதேச அரசு அனுமதி மறுத்தது.
இந்நிலையில்,லக்கிம்பூர் செல்ல காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர்,பிரியங்கா காந்திக்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதி வழங்கியுள்ளது.மேலும்,அவர்களுடன் மேலும்,3 பேர் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து,டெல்லி விமான நிலையத்திலிருந்து உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிற்கு ராகுல்காந்தி,காங்கிரஸ் கட்சியின் கேசி வேணுகோபால் ஆகியோர் புறப்பட்டுள்ளனர்.அவர்கள் உத்தரபிரதேசம் சென்றதும் அவர்களுடன் பிரியங்கா காந்தியுடன் லக்கிம்பூர் சென்று உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளனர்.