காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹு வீட்டில் ரூ.300 கோடி க்கு அதிகமான பணம் பறிமுதல் – பிரதமர் மோடி விமர்சனம்

pm modi

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் கருப்பு பணம் மீட்கப்பட்டு உள்ளது.

தீரஜ் சாஹூவுடன் தொடர்புடைய ஒடிசாவைச் சேர்ந்த மதுபான ஆலையின் பல தொழிற்சாலைகளில் இருந்து கிட்டத்தட்ட ரூ.300 கோடிக்கும் அதிகமான பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

10 நாள் சஸ்பென்ஸ் ஓவர்…. ராஜஸ்தான் மாநிலத்துக்கும் புதுமுக முதலமைச்சர்.! பாஜக அறிவிப்பு.! 

இதுகுறித்து பாஜக தரப்பில்,பாஜக தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், நிலையில், தகவல் தொடர்பு பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அவர்கள், சாஹுவிடம் இருந்து காங்கிரஸ் விலகிக் கொண்டது என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,பிரதமர் மோடி அவர்கள் இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘இந்தியாவில் மணி ஹெய்ஸ்ட் புனைவுக் கதையெல்லாம் தேவையில்லை. இங்கே காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அவர்கள் 70 ஆண்டுகளாக கொள்ளையடித்த வரலாறு கொண்டவர்கள். ஊழல் பணத்தை எண்ணும் பணி இன்னும்தான் தொடர்கிறது.’ என பதிவிட்டு விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்