காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹுவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்..!

Dheeraj

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த  சோதனையில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் கருப்பு பணம் மீட்கப்பட்டு உள்ளது.

தீரஜ் சாஹூவுடன் தொடர்புடைய ஒடிசாவைச் சேர்ந்த மதுபான ஆலையின் பல தொழிற்சாலைகளில் இருந்து கிட்டத்தட்ட ரூ.300 கோடிக்கும் அதிகமான பணத்தை  வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாலாரிகிர், திட்லாகர் மற்றும் சம்பல்பூர் தொழிற்சாலைகளில் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகளின் குவியலை எண்ண 50க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் ஐந்து நாட்களாக 40 இயந்திரங்களை பயன்படுத்தி எண்ணியுள்ளனர்.

காஷ்மீர் – லடாக்.! சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது செல்லும்.! உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!  

எஸ்பிஐ உட்பட மூன்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வங்கியாளர்களை பயன்படுத்தி எண்ணியுள்ளனர். சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களிலும் பணத்தை எண்ணியுள்ளனர். எண்ணும் போது சில இயந்திரங்கள் பழுதடைந்தன. டெக்னீஷியன்கள் பழுதுபார்ப்பதற்காக எங்களுடன் தங்கியிருந்தாக வங்கி ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாஜக  தரப்பில்,பாஜக தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில்,  நிலையில், தகவல் தொடர்பு பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அவர்கள், சாஹுவிடம் இருந்து காங்கிரஸ் விலகிக் கொண்டது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்