காதில் பூ வைத்து சட்டசபைக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.! பட்ஜெட்டுக்கு நூதன முறையில் எதிர்ப்பு…

Published by
மணிகண்டன்

காதில் பூவுடன் கர்நாடக பட்ஜெட் கூட்ட தொடரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இந்த பட்ஜெட் மக்களை முட்டாளுக்கும் என கூறி விமர்சனம்.   

கர்நாடக மாநிலத்தில் இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் பசுவராஜ் பொம்மை இடைக்கால பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வருடம் கர்நாடக மாநிலத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த இடைக்கால பட்ஜெட் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

காதில் பூ : இந்த பட்ஜெட் கூட்டத்தில் தொடருக்கு  எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வருகையில் காதில் பூ வைத்து வந்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும் காதில் பூ வைத்து சட்ட மன்றத்திற்குள் நுழைந்தார். கர்நாடக மக்களை, ஆளும் பாஜக அரசு முட்டாளாக்கி வருவதாகவும். இந்த பட்ஜெட் எப்படியும் மக்களை ஏமாற்றும் விதத்தில் இருக்கும் என்பதை உணர்த்தவும் காதில் பூ வைத்து இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்றதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூறியுள்ளனர்.

ராமர் கோவில் : இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பசுவராஜ் பொம்மை கர்நாடகாவின் ராமநகராவில் அயோத்தி ராமர் கோவில் போல ஓர் பெரிய ராமர் கோவில் ஒன்று இங்கு கட்டப்படும் என அறிவித்துள்ளார். மேலும், கோவில்கள், மடங்கள் மேம்பாட்டுக்காக அதன் வளர்ச்சி நிதியாக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், அதில் அறிவித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத் : மேலும், அந்த ராமர் கோவில் கட்டுவதற்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கூப்பிட்டு ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவோம். எனவும் கூறினார். மேலும், பல்வேறு திட்டங்கள் பற்றியும் பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் அறிவித்தார். நூறு கோடியில் பள்ளிகள் கூட்டமைப்பு,  50 லட்சம் விவசாயிகளுக்கு கடன் வழங்க 25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நிரந்தரமாக மூடப்பட்ட ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம்! இனி உச்சம் பெறுமா அதானி பங்குகள்?

நிரந்தரமாக மூடப்பட்ட ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம்! இனி உச்சம் பெறுமா அதானி பங்குகள்?

நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு  ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…

22 minutes ago

வெற்றி., வெற்றி! சாதனை படைத்த இஸ்ரோ.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…

44 minutes ago

304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! அயர்லாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்த இந்தியா!

ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…

2 hours ago

பரபரப்பு!! பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!

மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…

2 hours ago

Live: களைகட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல்… இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் வரை.!

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…

2 hours ago

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!

மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…

3 hours ago