சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு.. நிலைமை மோசமாக உள்ளது.! காங்கிரஸ் எம்எல்ஏ பரபரப்பு தகவல்.!

Published by
மணிகண்டன்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாளுக்கு நாள் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதனால் அங்கு பக்தர்கள் தரிசன காத்திருப்பு நேரம் என்பது கூடிக்கொண்டே செல்கிறது. தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டாலும் பக்தர்கள் காத்திருப்பு நேரத்தை குறைக்க முடியவில்லை. இதனால் சபரிமலை செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. சபரிமலையில் தரிசன நேரம் நீட்டிப்பு..!

சபரிமலை பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய கோட்டயம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு சபரிமலை, நிலக்கல், பம்பை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு சென்றது. அந்த ஆய்வு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.  இதனை கட்டுப்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என தெரிவித்தார்.

பம்பைவில், பக்தர்கள் தண்ணீர் அல்லது உணவு இல்லாமல் 8-9 மணி நேரம் வெயிலில் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். இந்த நிலை செயற்கையாக உருவாக்கப்பட்டது. பம்பைவில் ஒரே நேரத்தில் 15,000 யாத்ரீகர்கள் தங்கும் வகையில் ஒரு ஓய்விடம் இருந்தது. இருப்பினும், இந்த வசதி 2018 வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது, இரண்டு சிறிய ஓய்வு இடங்கள் மட்டுமே உள்ளன.

நிலக்கல் பகுதியிலும் குழுவினர் ஆய்வ செய்தனர். குளிரூட்டிகள்(AC) இயக்கப்படாமல் 100 முதல் 150 பக்தர்கள் வரையில் பேருந்துகளில் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். குழு பின்னர் பம்பையில் ஆய்வு கூட்டத்தை நடத்தியது.  அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் எதிர்கொள்ளும் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க குழு முடிவு செய்யபட்டுள்ளது என்றும் காங்கிரஸ் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் கூறினார்.

Recent Posts

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

3 minutes ago

இடைத்தேர்தல்: கேரளாவில் இரட்டை வெற்றியை காணும் காங்கிரஸ்!

கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…

7 minutes ago

கர்நாடகா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி! 3 தொகுதிகளையும் கைப்பற்றி அசத்தல்!

கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…

34 minutes ago

வயநாட்டில் வரலாற்று வெற்றி? ராகுல் காந்தி சாதனையை முறியடித்த பிரியங்கா காந்தி!

வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…

1 hour ago

ஒரு பக்கம் ஏக்நாத் ஷிண்டே முன்னிலை.. மறுபக்கம் உத்தவ் தாக்கரே மகன் பின்னடைவு! தேர்தல் நிலவரம் என்ன?

மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…

2 hours ago

மாலை 4 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…

2 hours ago