பெங்களூரு மெட்ரோ விபத்து.! கர்நாடக முதல்வர் ராஜினாமா செய்ய காங்கிரஸ் எம்எல்ஏ வலியுறுத்தல்.!
மெட்ரோ விபத்து சம்பவத்துக்கு பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ சவுமியா ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு நகரில் இன்று மெட்ரோ ரயிலின் கட்டுமானத்தின் போது தூண் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு வயது மகன் ஆகியோர் உயிரிழந்ததனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ சவுமியா ரெட்டி பேசுகையில், இந்த சம்பவத்துக்கு பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘ இதுவரை சாலை குழி மரணங்கள் விபத்து ஏற்பட்டன. ஆனால், இப்போது தூண்கள் இடிந்து விழுந்து விபத்து ஏற்படுகிறது. இது விதிமீறல், அலட்சியம் மற்றும் ஊழல் ஆகியவற்றின் தெளிவான நோக்கம்.’ எனவும் என்று எம்எல்ஏ ரெட்டி கூறினார்.